உடையபிராட்டி அம்மன் கோவில் தேரோட்டம்


உடையபிராட்டி அம்மன் கோவில் தேரோட்டம்
x

பொன்னமராவதி அருகே உடையபிராட்டி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

உடையபிராட்டி அம்மன் கோவில்

பொன்னமராவதி பொன்-புதுப்பட்டியில் உடையபிராட்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில், தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து இன்று உடையபிராட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தேராேட்டம்

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். தேரோட்டத்தில் சிறப்பு அம்சமாக ஒவ்வொரு ரத வீதிகளிலும் தேர் வந்த போது மாம்பழங்களை தேரின் மீது தூக்கி வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா அம்பலகாரர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story