இன்று சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை தேர்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள் தோறும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் காலை, மாலை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்தநிலையில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் தேரோடும் வீதிகளில் சேறும் சகதியுமாக இருந்த இடங்களில் ஜல்லிக்கற்களை கொட்டி சமன் செய்தனர். விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் இரும்புலிக்குறிச்சி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story