கடலூரில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பு மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்


கடலூரில்    கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பு    மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்
x

கடலூரில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பை மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்.

கடலூர்


டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா கடலூரில் நடைபெற்றது. இதற்கு மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கூட்டுறவு நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கு கூட்டுறவு பட்டய பயிற்சி மிகவும் அவசியமானது. எதிர்காலத்தில் நிறைய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவை கூட்டுறவு அமைப்புகள் மூலம் தான் வழங்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி கையேடுகளை மண்டல இணைப்பதிவாளர் வழங்கினார். முன்னதாக பயிற்சி நிலைய முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணை பதிவாளர் எழில்பாரதி, கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குனர் மஞ்சுளா, பயிற்சி நிலையத்தின் விரிவுரையாளர்கள் நிஷாந்தினி, சுபாஷினி, கேசவ் ஆனந்த், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.


Next Story