சாத்தூர் நகராட்சி சாதாரண கூட்டம்


சாத்தூர் நகராட்சி சாதாரண கூட்டம்
x

சாத்தூர் நகராட்சி சாதாரண கூட்டம்

விருதுநகர்

சாத்தூர்.

சாத்தூர் நகராட்சி சாதாரண கூட்டம் அதன் தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் அசோக், ஆணையாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர். மேலும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். வரவு, செலவு உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் தினத்தை முன்னிட்டு கவுன்சிலர்கள் அனைவரும் வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த 2 நாட்கள் பெய்த சாரல் மழையால் நகர் பகுதி முழுவதும் சாலைகள் மோசமாக உள்ளது. 8-வது வார்டு பகுதியில் அகலமான சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். அங்கன்வாடி மையத்தையும் சீரமைக்க வேண்டும் என கவுன்சிலர் பொன்ராஜ் கூறினார்.

4-வது வார்டு பகுதியில் குடிநீர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வினியோகம் இல்லை. இதை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் கணேஷ்குமார் கோரிக்கை வைத்தார். மக்கள் இயற்கை உபாதைகளுக்கு அவதிப்படுவதால் மதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து உடனே செயல்படுத்த வேண்டும் என கவுன்சிலர் கார்த்திக்குமார் வலியுறுத்தினார். கூட்டத்தின் முடிவில் கவுன்சிலர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் இளவரசன் கூறினார்.


Next Story