சதுரகிரி மலையில் தீ
சதுரகிரி மலையில் தீப்பிடித்து எரிந்தது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த மலையில் உள்ள 5-வது பீட்டில் ஊஞ்சக்கல் பாப்பநத்தான் கோவில் பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. காற்று வேகமாக வீசியதால் தீ மள மளவென பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ரேஞ்சர் செல்லமணி, பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய 30 பேர் 2 குழுக்களாக பிரிந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாப்டூர் வனச்சரகம் 5-வது பீட் தவசிப்பாறை பகுதியில் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story