1 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்
1 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்
திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஆரம்ப கட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து பணிகளை மேற்கொண்டாலும் அதன்பிறகு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் பாலித்தீன் பைகள் விற்பனை அவ்வப்போது தலைதூக்கி காணப்படுகிறது.
இந்தநிலையில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் காமாட்சியம்மன் கோவில் வீதி, கே.எஸ்.சி. பள்ளி வீதி, அரிசிக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். 13 கடைகளில் 1 டன் எடையுள்ள பாலித்தீன் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கடைகளுக்கு மொத்தம் ரூ.39 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story