திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தை


திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தை
x

திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தை

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்துக்கு உள்பட்ட வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் அவ்வப்போது சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திம்பம் மலைப்பாதையின் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடந்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த சிறுத்தை எதையும் கண்டுகொள்ளாமல் தடுப்பு சுவரில் நடந்தபடி இருந்தது. உடனே வாகனத்தில் சென்றவர்கள் சிறுத்தையை தங்களுடைய செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். சிறிது நேரம் வரை தடுப்பு சுவரில் நடந்து சென்ற சிறுத்தையானது, பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாய்ந்து சென்று மறைந்தது.


Next Story