மக்களுக்காக தன்னலம் கருதாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைக்கிறார்


மக்களுக்காக தன்னலம் கருதாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைக்கிறார்
x

மக்களுக்காக தன்னலம் கருதாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைக்கிறார் என்று டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. பேசினார்.

வேலூர்

காட்பாடி

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு காட்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் காட்பாடி-சித்தூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடந்தது.

விழாவிற்கு டி.எம். கதிர்ஆனந்த் எம்.பி., தலைமை தாங்கி 150 கர்ப்பிணிகளுக்கு அவருடைய சொந்த செலவில் பட்டுப்புடவை, வேஷ்டி உள்பட சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ''மக்களுக்காக தன்னலம் கருதாமல் உழைப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நல்லவர்கள் நன்றாக இருந்தால் தான் நமக்கு நல்ல திட்டங்கள் வந்து சேரும். கர்ப்பிணி பெண்களாகிய உங்களுக்கு இந்த அண்ணனின் சீர்வரிசையாக பட்டுப் புடவை, வேஷ்டி உள்பட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.

இதனை நீங்கள் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்'' என்றார்.

இதனையொட்டி ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், கர்ப்பகால பராமரிப்பு, ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் குழந்தை வளர்ச்சி குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

திட்டத்தின் நோக்கம் குறித்து காட்பாடி வட்டார மருத்துவ அலுவலர் ராணி நிர்மலா, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆகியோர் பேசினர்.

விழாவில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, விமலா சீனிவாசன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை மாவட்ட திட்ட அலுவலர் கோமதி வரவேற்றார்.

முடிவில் காட்பாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.


Next Story