வேதியியல் துறை பேரவை கூட்டம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூாியில் வேதியியல் துறை பேரவை கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேதியியல் துறை பேரவை கூட்டம் நடந்தது. வேதியியல் பேரவை மாணவ செயலாளர் மாலதி ஐஸ்வர்யா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வேதியியல் துறை உதவி பேராசிரியர் க.அருண் பிரசாத் லிங்கம் கலந்து கொண்டு "வேதியியல் பட்டதாரிகளுக்கு என்ன தேவை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர் வேதியியலின் முக்கியத்துவம், உயர்கல்விக்கான தேர்வுகள் மற்றும் வேதியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசினார். நிகழ்ச்சிகளை மாணவிகள் அஜிநேஷா, ரபியா மின்கா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில், 2-ம் ஆண்டு மாணவ துணை செயலாளர் சிவசுந்தரி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் கலைச்செல்வி, வேதியியல் பேரவை மன்ற செயலாளர் பேராசிரியர் அம்பிகாவதி மற்றும் வேதியியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.