செண்பகவல்லி அம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று 3-வது நாள் இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம் சார்பில் நடந்த விழாவில், புது கிராமம் விநாயகர் கோவிலில் இருந்து சிலம்பாட்டம், ஒயிலாட்டம், வாள் விளையாட்டு உள்ளிட்டவை முன் செல்ல பால்குடம், தீர்த்தகுடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழா கமிட்டியார்கள் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக செண்பகவல்லி அம்மன் கோவில் வந்தடைந்து.
Related Tags :
Next Story