செங்கல்பட்டு சாலை விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தல் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் ;
செங்கல்பட்டு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வருந்துகிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்:என தெரிவித்துள்ளார் .
Related Tags :
Next Story