சென்னை: வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது


சென்னை: வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது
x

பூந்தமல்லி அருகே வீட்டில் கஞ்சா செடியை வளர்த்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 34). இவர் வீட்டின் அருகே உள்ள புதரில் கஞ்சா செடி வளர்ப்பதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அவர் வீட்டின் அருகே முட்புதரில் மறைத்து கஞ்சா செடி வள்ர்த்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து முட்புதரில் வளர்ந்து இருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா செடியை வளர்த்த வினோத்தை கைது செய்து விசாரித்தபோது போதைக்காக கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்த்து வந்தது தெரியவந்தது. இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வேறு எங்கெல்லாம் கஞ்சா செடியை வளர்த்து வருகிறார் என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். போதைக்காக கஞ்சா செடியை வீட்டின் அருகே வளர்த்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story