கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள சிலைகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
சென்னை,
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே வண்டி புறம்போக்கு இடத்தில், அமைக்கப்பட்டுள்ள சிலைகளில் குறிப்பிட்டவற்றை மட்டும் அகற்றாமல், அனைத்து சிலைகளையும் அகற்றவேண்டுமென, அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
Related Tags :
Next Story