சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில்: எனது கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி -தமிழிசை அறிக்கை
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில்: எனது கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி கவர்னர் தமிழிசை அறிக்கை.
சென்னை,
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்தமிழக மக்களுக்காக ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் நேரடியாக நான் கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை தொடங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த சேவையை 24-ந் தேதி (நாளை) தொடங்கி, தென் தமிழக மக்களின் பயணத்தை எளிதாக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story