சென்னை தபால் நிலைய அலுவலர் மர்ம சாவு
சோளிங்கர் அருகே சென்னை தபால் நிலைய அலுவலர் மர்மமான முறையில் இறந்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஐப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). இவர் சென்னையில் தபால் நிலைய அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஐப்பேட்டில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் இரவு 9 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story