சென்னை: கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வடமாநில சிறுவர்கள் மீட்பு..


சென்னை: கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வடமாநில சிறுவர்கள் மீட்பு..
x

கோப்புப்படம் 

சவுகார்பேட்டை பகுதிகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வடமாநில சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

சென்னை,

சென்னை சவுகார் பேட்டையில் தங்கம் மற்றும் வெள்ளி பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநில சிறுவர்களை குறைந்த விலைக்கு வாங்கி கொத்தடிமைகளாக பணியாற்ற வைத்துள்ளது காவல் துறைக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனை செய்து, பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 24 வடமாநில சிறுவர்களை மீட்டனர்.

சிறுவர்களிடம் நடத்திய விசாரனையில், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.5 ஆயிரம் போன்ற குறைந்த அளவிலான பணம் மட்டும் கொடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியது விசாரணையில் அம்பலமனது.

இதையடுத்து அந்த நகை பட்டறை நடத்திவந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரனையானது நடைபெற்று வருகிறது.


Next Story