சென்னை: நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு


சென்னை: நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு
x

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் செவிலியர் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை,

சென்னை, அசோக் நகர் 12-வது அவென்யூல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீயை அணைத்து வீட்டினுள் இருந்த மூதாட்டி ஜானகி (வயது 93) மற்றும் செவிலியர் ஜெயப்பிரியா (27) மற்றும் 72 வயது நிரம்பிய ஒரு பெண்ணையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் மூதாட்டி ஜானகி, செவிலியர் ஜெயப்பிரியா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டி ஜானகியை கவனித்து கொள்வதற்காக மதுரவாயல் பகுதியை சேர்ந்த செவிலியர் ஜெயப்பிரியா அவர்களுடன் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், சமையில் அறையில் இருந்து ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. 72 வயது நிரம்பிய ஒரு பெண்மணி மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக குமரன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story