சென்னை பெண் கழுத்தை இறுக்கி கொலை -காதலன் கைது


சென்னை பெண் கழுத்தை இறுக்கி கொலை -காதலன் கைது
x

கணவர், மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள கண்ணக்குருக்கை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 36), லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி நதியா (32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தங்கராஜின் செல்போனில் இருந்து தவறுதலாக சென்ற அழைப்பின் மூலம் அவருக்கும், நதியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. தங்கராஜ் வேலைக்காக சென்னைக்கு வரும்போது நதியாவை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

காதலன் வீட்டுக்கு சென்றார்

நதியாவின் கள்ளக்காதலை அறிந்த பார்த்தசாரதி அதனை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த நதியா அவரது கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு நேற்று முன்தினம் இரவு கண்ணக்குருக்கை கிராமத்தில் உள்ள தங்கராஜின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அவர் தங்கராஜியிடம், 'நான் இனிமேல் உன்னோடுதான் வாழ்வேன்' என்று கூறியுள்ளார். இதை கேட்டு தங்கராஜின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தங்கராஜ் மற்றும் நதியாவிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் வேதனை அடைந்த நதியா தற்கொலை செய்து கொள்வதாக அங்கிருந்து சென்றார்.

கழுத்தை இறுக்கி கொலை

உடனே தங்கராஜ் அவரை சமாதானம் செய்ய பெரியகோளாப்பாடி மலை குன்று பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது தங்கராஜூக்கும், நதியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், நதியாவை அவரது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பியோடிய தங்கராஜை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.


Next Story