சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம்
சென்னகேசவ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைெபற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணற்றில் பழமைவாய்ந்த செங்கமலத்தாயார், சென்னகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் தாயார் சிவப்புபட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மல்லாங்கிணறு பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், அருப்புக்கோட்டை இந்து அறநிலையத்துறை கோவில் தக்கார் தேவி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்ைத ெதாடங்கி வைத்தனர். தேரானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கோவிலை வந்தடைந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், மல்லாங்கிணறு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.