ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா


ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம்  புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்தபூமங்கலம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உடன்குடி பங்குத்தந்தை விக்டர் லோபோ அர்ச்சிப்பு செய்தார். அமலிபுரம் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் அடிகளார் கொடியேற்றினார். தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை செல்வன் பர்னாண்டோ அடிகளார் இணைந்து நிறைவேற்றினர். 8 நாட்களும் காலையில் திருப்பலியும் மாலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மறையுறை, நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 24-ந் தேதி மாலையில் திருவிழா மாலை ஆராதனை, தொடர்ந்து இரவு புனித மிக்கேல் அதிதூதர் உருவ சப்பரபவனி நடக்கிறது. 10-ம் திருநாளன்று காலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் சிறுவர், சிறுமியர்கள் புது நன்மை நற்கருணை பெறும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து காலையில் சப்பர பவனியும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வன் பர்னான்டோ அடிகளார், ஊர் தலைவர் கிளமென்ட்ஸ், செயலாளர் சகாயம் மற்றும் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்


Next Story