மாதனூரில் செஸ் விழிப்புணர்வு போட்டி


மாதனூரில் செஸ் விழிப்புணர்வு  போட்டி
x

மாதனூரில் நடந்த செஸ் விழிப்புணர்வு போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

மாதனூரில் நடந்த செஸ் விழிப்புணர்வு போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.

போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




Next Story