சதுரங்க போட்டி


சதுரங்க போட்டி
x

கடையநல்லூரில் சதுரங்க போட்டி நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இடையே சதுரங்க போட்டி நடைபெற்றது. மாணவர்களுக்கான போட்டியை பள்ளி தாளாளர் ஜெய்லானி தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கான போட்டியை முதன்மை தலைமை ஆசிரியர் அப்துல் கனி தொடங்கி வைத்தார். இறுதி சுற்று போட்டியை டாக்டர் முகைதீன் பிள்ளை மற்றும் ஷேக் உதுமான் ஆகியோர் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் நாமத்துல்லா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் 10 சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சுதந்திர தினத்தன்று பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படுகிறது.


Next Story