செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு
கடையநல்லூரில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு
தென்காசி
கடையநல்லூர்:
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரம்படி, திட்ட இயக்குனர் சுரேஷ், உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன் அறிவுரைபடி, கடையநல்லூர் ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ், நயினாரகரம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா, ஊராட்சி செயலர் மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் இடைகாலில் பயணிகள் நிழற்குடை மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவற்றில் செஸ் விளையாட்டு லோகோ வரையப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story