செஸ் ஒலிம்பியாட்: "உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளது" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


செஸ் ஒலிம்பியாட்:  உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

'சவுத் ஸ்போர்ட்ஸ்' என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

தமிழகம் விளையாட்டு உள்பட அனைத்து துறைகளிலும் மேம்பட்டு விளங்க திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் அனைவருக்குமான ஆட்சி,அனைத்து துறைகளுக்குமான ஆட்சி நடந்து வருகிறது என்றார்.

மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது நமக்கு பெருமை. உரிய நேரத்தில் எடுத்த முயற்சியால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளது என்றார்.

மேலும், அவர் கிரிக்கெட் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றும், எத்தகைய பணிச் சூழல் இருந்தாலும் நானும்,கலைஞரும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் பார்ப்போம் என்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story