செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாநில அளவில் முதலிடம்


செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாநில அளவில் முதலிடம்
x

தனியார் பொறியியல் கல்லூரி நடத்திய போட்டியில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து அறிவியல் ஆசிரியர் செல்வகணபதி வழிகாட்டுதலுடன் சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் புதுமை படைப்பிற்கான போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் 450-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் நவீன ஊன்றுகோலை கண்டுபிடித்து காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர்.

அவர்களின் கண்டுபிடிப்பான ஊன்றுகோலை பயன்படுத்தி நடக்கும்போது தண்ணீர், சாக்கடை, விலங்குகள் மற்றும் பொருட்கள், மனிதர்கள் குறிக்கிடும் போது அவற்றை சென்சார் மூலம் மாற்றுத்திறனாளி காதுகளுக்கு கேட்கும் படியாக அமைத்துள்ளனர்.

இதையடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சென்னை சாய்ராம் கல்லூரி நிர்வாகத்தினர் முதல் பரிசு வழங்கி பாராட்டினர்.

மாநில அளவிலான அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் உமர்பாரூக், விஷ்ணுபிரசாத், ரூபேஷ்கண்ணன், விஷால், அமிர்தப்பிரியன் மற்றும் அறிவியல் ஆசிரியர் செல்வகணபதி ஆகியோரை தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு தலைவர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.


Next Story