ஜனாதிபதி, பிரதமருக்கு தானியங்களை பரிசாக வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஜனாதிபதி, பிரதமருக்கு தானியங்களை பரிசாக வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஜனாதிபதி, பிரதமருக்கு தானியங்கள் உள்ள பெட்டகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை டெல்லியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தானியங்கள்

தானியங்கள் அடங்கிய பெட்டகத்தில் இடம் பெற்றவை வருமாறு:-

மாப்பிள்ளை சம்பா-சிவப்பு நிறத்தால் 'ஆண்ட்டி ஆக்சிடண்ட்' தன்மையை கொடுத்து நோயின்றி காக்கும் அரிசி.

குள்ளக்கார் - பாலூட்டும் பெண்களுக்கும், கருத்தரிக்கும் பெண்களுக்கும் ஊட்டம் தரும் அரிசி.

கருப்புக்கவுனி - நெடுங்காலம் அரசர்களுக்கு மட்டும் பயிரிடப்பட்ட 'ஆந்தோசயனைன்' நிறைந்த புற்றை தடுக்கும் கருப்பு அரிசி.

சீரகச்சம்பா - பாலாற்றங்கரையில் பயிராகும் தனித்துவ மணம் கொண்ட சுவைமிக்க அரிசி.

குடவாழை - தோலுக்கு பொலிவு அளிக்கும் மரபு சிவப்பு அரிசி.

கம்பு - அருந்தானியங்களின் அரசன்.

வரகு - தமிழ் மூதாட்டி அவ்வை விரும்பி கேட்டு உண்ட மெல்ல சர்க்கரை தரும் மரபு தானியம்.

சாமை - பழங்குடி மக்கள் பயிராக்கி படைத்திடும் மருத்துவ குணமிக்க சிறுதானியம்.

தினை - கண்ணுக்கும், குழந்தைக்கும் நலம் தரும் பொன்னிற தானியம்.

கேழ்வரகு - இரும்பும், கால்சியமும் நிறைந்த, தாய்ப்பாலுக்கு அடுத்ததாக தரப்பட வேண்டிய முதல் திட உணவு.


Related Tags :
Next Story