கொரோனா தொற்று உயர்வு எதிரொலி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் மக்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றத் தவறிவிட்டனர்.
எனவே தொற்றின் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு ஏதாவது முடிவு எடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story