வேலூரில் அதிகாலையிலேயே கள ஆய்வை தொடங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...! படபடப்பான அதிகாரிகள்...!


வேலூரில் அதிகாலையிலேயே  கள ஆய்வை தொடங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...! படபடப்பான அதிகாரிகள்...!
x
தினத்தந்தி 2 Feb 2023 8:53 AM IST (Updated: 2 Feb 2023 10:02 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

வேலூர்,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள நேற்று வேலூர் சென்றார்.

சத்துவாச்சாரியில் காலை உணவு திட்டத்தையும் கள ஆய்வு திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கள ஆய்வு திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் ஆலோசனை நடத்தினார்.

இந்தநிலையில், வேலூரில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். காலை உணவு திட்டம், சுகாதார நிலைய கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


Next Story