கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
சென்னை,
தமிழ்நாட்டின் கவர்னராக ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story