முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றுவிட்டு அன்று இரவே சென்னை திரும்புகிறார்.
சென்னை,
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் வெகு சிறப்பாக கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8.45 மணிக்கு காரில் புறப்படுகிறார்.
பின்னர் காலை 9 மணிக்கு பழவந்தாங்கலில் உள்ள நேரு ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். அந்தப்பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை 9.40 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து 10 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு காலை 11.25 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைகிறார்.
நூலகம் திறப்பு
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரை சர்க்கியூட் ஹவுசுக்கு பிற்பகல் 12.30 மணிக்கு செல்கிறார். அங்கு சற்று ஓய்வெடுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்க்கியூட் ஹவுசில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 4.30 மணிக்கு சென்று, அந்த நூலகத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு 5.30 மணிக்கு ஏ ஆர் கிரவுண்டை சென்றடைகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.
சென்னை வருகை
அங்கு பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு கோச்சடையில் உள்ள மறைந்த கருமுத்து கண்ணனின் வீட்டுக்கு இரவு 7 மணிக்குச் செல்கிறார். அங்கிருந்து 7.30 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை இரவு 8 மணிக்கு சென்றடைகிறார்.
அங்கிருந்து 8.55 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டிற்கு செல்கிறார்.