மூன்றாம் வகுப்பு மாணவி 'தமிழ்' என எழுதியதை பார்த்து மகிழ்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
3 -ம் வகுப்பு பயிலும் சிறுமியை அழைத்து “தமிழ்” என்று எழுதுமாறு கேட்டார்.
சென்னை,
திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், "எண்ணும் எழுத்தும்" என்ற முன்னோடித் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, "எண்ணும் எழுத்தும்" மாதிரி வகுப்புகளை பார்வையிட்டார். அங்குள்ள "எண்ணும் எழுத்தும்" மாதிரி வகுப்புகளை பார்வையிட்ட போது, 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை அழைத்து "தமிழ்" என்று எழுதுமாறு கேட்டார், அச்சிறுமியும் "தமிழ்" என்ற வார்த்தையை சரியாக எழுதியதைப் பாராட்டி இனிப்புகளை வழங்கினார்.
Related Tags :
Next Story