கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
x

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சித்தராமையாவுக்கும், துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

மதச்சார்பின்மையை போற்றும் இவ்விருவரும் தங்கள் திறமையான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மாநிலத்தை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என உளமார நான் நம்புகிறேன்.

தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூருவில் இன்று (நேற்று) நடைபெற்ற பதவியேற்பு விழா.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story