தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினர் ஏற்பாடு


தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை  வரவேற்க தி.மு.க.வினர் ஏற்பாடு
x

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினர் சிறப்பான ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ராகுல்காந்தி நடைபயணம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று (புதன்கிழமை) மாலை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். நாளை (வியாழக்கிழமை) நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறர்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு எம்.பி ஆகியோரும் வருகின்றனர்.

வரவேற்பு

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்வதால், சாலைகளில் முக்கிய சந்திப்புகள் அனைத்திலும் போலீசார் பணியமர்த்தப்பட உள்ளனர்.


Next Story