தாய்மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசிபெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தாய்மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசிபெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

வீட்டுக்கு நேரில் சென்று தனது தாய்மாமாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆசிபெற்றார்.

திருவாரூர்,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் கோவில்திருமாளம் கிராமத்தில் அமைந்துள்ள தனது தாய்மாமா தெட்சிணாமூர்த்தி வீட்டிற்கு மதியம் 1.30 மணி அளவில் சென்றார்.

பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி பெற்றார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய்மாமா தெட்சிணாமூர்த்திக்கு நேற்று முன்தினம் 100-வது பிறந்த நாள். இதனையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் நேரில் வீட்டிற்கு சென்றார். அங்கு தனது தாய்மாமா தெட்சிணாமூர்த்திக்கு சால்வை அணிவித்து மாமாவை கட்டி அனைத்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றார்.

நலம் விசாரித்தார்

பின்னர் தனது மாமாவிடம், நீங்கள் நல்ல முறையில் சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு கண் பார்வை நன்றாக தெரிகிறதா? குடும்பத்தில் அனைவரும் நலமா? என்று நலம் விசாரித்தார்.

தொடர்ந்து அங்கு டீ குடித்தார். இந்த நிகழ்வு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது. அதன் பின்பு முதல்-அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜி, மெய்யநாதன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story