சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கு நினைவுப்பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழுப்புரம்,
இரண்டு நாள் கள ஆய்வு பணிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் சென்றார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கிய காவல்துறையினருக்கான கலந்தாய்வு கூட்டத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார். சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து 3 மாவட்ட விவசாயிகள், தொழில் முனைவோர், மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசித்தார்.
இந்நிலையில், இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் சிறப்பாக சமூக சேவையாற்றிய 13 நபர்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நினைவு பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து, கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி 3 மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் பற்றி ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.