பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோரும், ஆசிரியர்களைப்போல் நானும் காத்திருக்கிறேன் என முதல்-அமைச்சர்க மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

சென்னையில் மட்டும் தலா 180 மையங்களில் 88 ஆயிரத்து 104 மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 பேர் எழுத இருக்கின்றனர்.

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

என் பேரன்பிற்குரிய 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

என்ன பரீட்சை டென்ஷனில் இருக்கிறீர்களா... ஒரு டென்ஷனும் வேண்டாம்... எந்த பயமும் வேண்டாம். இது வெறும் இன்னொரு பரீட்சை. அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும்.

எந்த கேள்வி என்றாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்து தான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு அப்ரோச் பண்ணுங்க.

உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கை, மன உறுதி தான்... அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள்.

தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவது. உயர்த்தி விடுவது. எந்தவித தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.

தேர்வை பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள்... புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள்.

நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோரும், ஆசிரியர்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்.

முதல்-அமைச்சராய் மட்டும் அல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவனாய் வாழ்த்துகிறேன். ஆல் தி பெஸ்ட்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story