இன்று நடக்கும் நகர சபை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை
இன்று நடக்கும் நகர சபை கூட்டத்தில் முதல் அமைச்சர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
இன்று நடக்கும் நகர சபை கூட்டத்தில் முதல் அமைச்சர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கிராம சபை கூட்டங்கள் போல் நகர பகுதி சபை கூட்டங்கள், இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இதனைப் போல முதன் முறையாக நகர் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் நகரசபை மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் இன்று கூட்டம் நடைபெறுகிறது . தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
தாம்பரம் மாநகராட்சி பம்மல் பகுதியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, முதல்வர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.