கரூர் மாவட்ட காசநோய் குழுவிற்கு முதல்-அமைச்சர் பரிசு


கரூர் மாவட்ட காசநோய் குழுவிற்கு முதல்-அமைச்சர் பரிசு
x

காசநோய் தொற்றின் விகிதம் குறைந்து உள்ளதால் கரூர் மாவட்ட காசநோய் குழுவிற்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்கப்பட்டது.

கரூர்

காசநோய் இல்லாத இந்தியா 2025 என்ற இலக்குடன் நாடு முழுவதும் காசநோய் ஒழிப்பு திட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. மேலும், மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் மத்திய காசநோய் பிரிவானது ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான காசநோய் தொற்று கணக்கெடுக்கும் பணியை நடத்தி வருகிறது. தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறது. அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் கலெக்டரின் வழிகாட்டுதலின்படி அனைத்து மருத்துவ அலுவலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் காசநோய் தொற்று விகிதமானது கடந்த 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் குறைந்து உள்ளது. இதனை பாராட்டும் வகையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் கரூர் மாவட்ட காசநோய் பிரிவிற்கு தமிழக முதல்-அமைச்சர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

இதுபோல் காசநோய்களுக்கு அரசு வழங்கி வரும் உதவியுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் ஊட்டச்சத்து உதவி வழங்கி வருகின்றன. இதையொட்டி தேனியை சார்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக முகமது கலீலுக்கு அரசின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இனிவரும் காலங்களில் மருத்துவ குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து காசநோய் இல்லா கரூர் மாவட்டத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.


Next Story