சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
x

சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

சிக்கண்ணா அரசு கல்லூரி

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கல்லூரியில் பி.ஏ.தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், வரலாறு, பி.காம், பி.காம்.சி.ஏ., பி.காம் சர்வதேச வணிகம், பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்.சி.கணினி அறிவியல் ஷிப்ட்-1, ஷிப்ட்-2, பி.எஸ்.சி.இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் ஆகிய இளநிலை பட்ட வகுப்புகள் உள்ளன.

இணையதளம்

இந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tngasa.in மற்றும்www.tngasa.orgஎன்ற இணையதளத்தின் மூலமாக கடந்த 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் செல்போன், மடிக்கணினி, கணினி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் தாங்கள் சேர விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து அந்த கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதும். ஒன்றிற்கு மேற்பட்ட கல்லூரியை தேர்வு செய்யும்போது ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதலாக பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

சிறப்பு ஒதுக்கீடு

விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50-ஐ இணையவழியில் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் ரூ.2 செலுத்தினால் போதும். விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தில் தகவலை பெற முடியும்.

மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சிறப்பு ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்ட அளவிலான சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் (கல்வி மாவட்டம் மட்டும் ஏற்க முடியாது) மட்டுமே விளையாட்டு பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும். மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிட்ட சான்றதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.cgac.inஎன்ற கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்படும்.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

----


Next Story