மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான வெங்கடேசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி, பேரூராட்சி துணைத் தலைவரும், மேலாண்மை குழு தலைவருமான கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது அவர், ஒழுக்க நெறிமுறைகளை எடுத்து கூறி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தன்னார்வ கல்வியாளர் சிவப்பிரகாசம் பள்ளிக்கு கணினி, பிரிண்டர் ஆகியவற்றை வழங்கினார். இதில் உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி, தமிழ் ஆசிரியர் மகேஷ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.