கரும்பு டிராக்டர் மோதி குழந்தை பலி
மூங்கில்துறைப்பட்டு அருகே கரும்பு டிராக்டர் மோதி குழந்தை பலியானது.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு:
கிருஷ்ணகிரி மாவட்டம் கரடிகொள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன் (வயது 27). இவர், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள இளையாங்கன்னி கூட்டு சாலையில் பேக்கரி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அகிலா(23). இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனது 2 வயதுடைய மகன் பிரகதீசுடன் பேக்கரிக்கு வந்தார். அப்போது மூங்கில்துறைப்பட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த கரும்பு டிராக்டர் எதிர்பாராத விதமாக பிரகதீஷ் மீது மோதியது. இதில் குழந்தை பிரகதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story