2 சிறுமிகளுக்கு குழந்ைத திருமணம்; 15 பேர் மீது வழக்கு


2 சிறுமிகளுக்கு குழந்ைத திருமணம்; 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

2 சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடந்தது தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கை

மானாமதுரை,

மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், திருப்புவனம் அருகே தாழிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் செல்வநாதன் (வயது 24) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தைகள் நலக்குழு சமூக நலப்பணியாளர் சத்தியமூர்த்தி மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் செல்வநாதன் மற்றும் உறவினர்கள் ஈஸ்வரன், சாரதா, விஜயா, வனிதா, சுமதி, சித்ரா, குருநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், திருப்புவனம் அருகே உள்ள கீழ பூவந்தி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (வயது 24) என்பவருக்கும் கடந்த மாதம் 30-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து அறிந்த குழந்தைகள் நலக்குழுவினர் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் முருகன், உறவினர்கள் ஆறுமுகம், மீனாட்சி, ஆதி செல்வம், பிரியா, விஜயகிருஷ்ணன், இந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story