குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x

திருவாடானை யூனியனில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் தலைவர் முகமது முக்தார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் மலைராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருவாடானை யூனியனில் சேதமடைந்துள்ள அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வேண்டும்.அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, கட்டிட வசதிகள் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், சைல்டு ஹெல்ப்லைன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு சமூகப் பணியாளர் வாசுகி, வேர்ல்ட் விஷன் தொண்டு நிறுவன மேலாளர் எபநேசர், சமுதாய சுகாதார செவிலியர் பத்மா, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மெர்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story