குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
காரைக்குடி
கோட்டையூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகர, பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தவும், காலமுறை கூட்டம் நடத்தி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறிவுரையின்படி குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சத்தியமூர்த்தி விளக்க உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் கார்த்திக் சோலை, துணைத்தலைவர் ராஜேஸ்வரி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பள்ளி தலைமையாசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் பாலியல் விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. பின் பெற்றோர் மற்றும் குழந்தைகளிடம் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நகர, பஞ்சாயத்து அளவிலான வாட்ஸ்-அப் குழு ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.