குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
பேரையூர், டி.கல்லுப்பட்டி பேரூராட்சிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
பேரையூர்,
பேரையூர் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் குருசாமி தலைமை தாங்கினார்.. செயல்அலுவலர் ஜெயதாரா, துணைத்தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்கணேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பஷீர்அகமது, துணைத்தலைவர் பாண்டிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டங்களில் மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், குழந்தை தொழிலாளர் முறைகளை ஒழித்தல், பள்ளி இடைநிற்றலை குறைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. 2 பேரூராட்சிகளிலும் நடந்த கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.