குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்


குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பேரூராட்சியில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பேரூராட்சியில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் உஷா வரவேற்றார். கூட்டத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் கலைச்செல்வி, வசந்தா, செவிலியர் கவிதா, மாலினி, பெர்னத் ஆகியோர் குழந்தை வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து பேசினர். கூட்டத்தில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபசிங், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர்செல்வதாஸ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் இசக்கிப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story