குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x

நெல்லையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட உத்தரவுப்படி தச்சநல்லூர் மண்டலத்துக்கான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் ரேவதி பிரபு தலைமை தாங்கினார். உறுப்பினர் செயலர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, வருவாய் துறை, சுகாதாரம், தொழிலாளர் துறை அதிகாரிகள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.



Next Story