குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ், பாரதியார் அறக்கட்டளை முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை 63748 10811 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். தங்களுக்கு யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் பெற்றோரிடமோ அல்லது போலீஸ் செல் போனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பேசி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், பாதுகாப்பு குறித்த புத்தகங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கிடைத்திடவும், குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம், ஆசிரியர்கள் மாலினி, தேவி, செல்வி, வினோதா உள்பட 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியை ஸ்ரீரெங்கம்மாள் நன்றி கூறினார்.