குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

வேலூர்அருகே குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

வேலூர் மாவட்ட சைல்டுலைன் சார்பில் கணியம்பாடி ஓன்றியம் மேல்வல்லம் கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கீழ்வல்லம் ஊராட்சிமன்ற தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி கலந்து கொண்டு பேசினார்.

வேலூர் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றியும், குழந்தை தொழிலாளர்முறை அகற்றுதல், சிறுமி, சிறுவர்களின் திருமணத்தை தடுத்தல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்வது தொடர்பாக விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சைல்டுலைன் அணி உறுப்பினர் நாகப்பன் நன்றி கூறினார்.


Next Story