கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகள்


கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகள்
x

திண்டுக்கல்லில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கோவிலுக்கு குழந்தைகள் வந்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள கே.ஆர்.நகர் ஸ்ரீரூபகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் கிருஷ்ணனின் பாடல்களை பாடியவாறு ஆடி, பாடி மகிழ்ந்தனர். இதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story